Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜனவரி 24 , மு.ப. 09:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
- க.கமல்
போதைப்பொருள் செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட 18 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் இருவருக்கு தண்டனையை நிறைவேற்ற, சட்ட மா அதிபர் திணைக்களம் அனுமதியளித்துள்ளது.
இது குறித்து, நீதி அமைச்சினால் நேற்று (23) வெளியிடப்பட்ட அறிக்கையில்,
மரண தண்டனைக்கு உள்ளானவர்களின் பெயர் விவரம் குறித்தும் அவர்களுக்கு எதிராக எடுக்கப்படவுள்ள சட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும், நீதி அமைச்சர் தலதா அத்துகோரல, அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம், போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் மரண தண்டனைக்கு ஆளான 18 பேருடைய பெயர் விவரம் பெற்றுகொள்ளப்பட்டு உள்ளதெனவும், அவர்களில் இருவருக்கு தண்டனையை நிறைவேற்ற அனுமதி கிடைத்துள்ளதென்றும், அதுகுறித்த ஆவணங்களை, ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளரிடம் கையளித்துள்ளதாகவும், அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
56 minute ago
2 hours ago