Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Editorial / 2018 ஜூலை 06 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகேஸ்வரி விஜயனந்தன்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இருக்கும் வரை, ஹிட்லர் ஆட்சிக்கு இடமில்லையெனத் தெரிவித்த அமைச்சர் சந்திராணி பண்டார, “ஹிட்லர் வரப்போகிறார் என்று பயமுறுத்தியே, குழந்தைகளுக்குத் தாய்மார், உணவு ஊட்டுகின்றனர்” என்றார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (05) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, அசோக்க பிரியந்த எம்.பி எழுப்பிய குறுக்குக் கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“அதாவது முன்பெல்லாம் பேய், பூதங்கள் வருவதாகப் பயமுறுத்தியே, குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவார்கள். ஆனால், சில வாரங்களாக ஹிட்லர் ஆட்சிக்கு வரபோகிறார் என்று பயமுறுத்தியே, குழந்தைகளுக்கு உணவு ஊட்டப்படுகின்றது” என்றார்.
“சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க, சட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்காக, விசேட நீதிமன்றக் கட்டமைப்பை, நீதியமைச்சரிடம் நாம் கோரியுள்ளோம். அவ்வாறான நீதிமன்றத்தில், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள், துஷ்பிரயோகங்கள் தொடர்பான வழக்குகள், வாரத்தில் ஒரு நாளில் மாத்திரமாவது விசாரணை செய்யப்பட வேண்டும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
2 hours ago
2 hours ago
11 May 2025