2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இறுதி அழைப்பு தொடர்பில் விசாரணை

George   / 2016 நவம்பர் 16 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரக்பி வீரர் வசிம் தாஜுதீன் கொலை செய்யப்படுவதற்கு சில மணிநேரத்துக்கு முன்னர் அவரது நண்பர் ஒருவரினால் தாஜுதீனுக்கு தொலைபேசி அழைப்பொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதி சொலிஸ்டர் ஜெனரல் டிலான் ரத்நாயக்க, கொழும்பு மேலதிக நீதவானின் கவனத்துக்கு இன்று புதன்கிழமை கொண்டுவந்தார்.

றக்பீ வீரர் வசிம் தாஜுதீனின் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்க, நாரஹேன்பிட்டிய பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோர், கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் இன்று (16)  ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, நீதிமன்றத்தில் முன்னிலையான பிரதி சொலிஸ்டர் ஜெனரல் டிலான் ரத்நாயக்க,மேற்படி விடயத்தை நீதவானின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

வசிம் தாஜுதீன் கொலை செய்யப்படுவதற்கு சில மணிநேரத்திற்கு முன்னர் அவரது நண்பர் ஒருவரினால் தாஜுதீனுக்கு தொலைபேசி அழைப்பொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அது குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் கவனம் செலுத்திய நீதவான், இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பித்தார்.

அத்தடன், சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .