2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

இலங்கைக்குப் பாகிஸ்தான் தண்டர் விமானம் விற்பனை

Thipaan   / 2015 டிசெம்பர் 31 , பி.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், இரண்டு நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு இம்மாதம் 4ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கின்றார்.

அவரது விஜயத்தின் போது, JF-17 தண்டர் விமானம் ஒன்றை இலங்கைக்கு விற்பனை செய்யும் உடன்படிக்கையொன்றில் கையொப்பமிடுவார் என டிபென்ஸ் வீக்லி எனும் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

JF தண்டர் விமானம் பாகிஸ்தான் மற்றும் சீன விமான தயாரிப்பு கம்பனிகள் இணைந்து தயாரித்த 3ஆம் தலைமுறை விமானமாகும்.

விமானப்படைத் தளபதி ககண் புளத்சிங்களவிடம் இந்த விமானத் தயாரிப்பு நிலையத்தை பார்வையிட தொழில்நுட்பவியலாளர் அணியொன்றை அனுப்பும்படி பாகிஸ்தான் கேட்டிருந்தது.

இலங்கை விமானப்படையிடம் சீனத் தயாரிப்பு யுத்த விமானங்கள் பல  உள்ளன. இப்போது விமானப்படையின் போரிடும் ஆற்றலை அதிகரிக்கும் நோக்கில் அரசாங்கம் JF-17 ரக விமானங்களை கொள்வனவு செய்கின்றது.

இஸ்ரேல் தயாரிப்பான கிபிர் விமானங்களில் மட்டுமே இலங்கை விமானப்படை தற்போது தங்கியுள்ளது.

பாகிஸ்தானில் மட்டுமே JF-17 தற்போது பயன்படுத்தப்படுகின்றது. பாகிஸ்தான் விமானப்படை முன்னைய டஸோல்ற் மிராஜ் மற்றும் சீன தயாரிப்பான F-7p ஆகிய விமானங்களை படிப்படியாக குறைத்து வருகின்றது.

இது குறைந்த பட்சம் JF-17 ரக விமானங்கள் 250ஐ  இணைத்துக்கொள்ள திட்டமிட்டு வருகின்றது. சீனா, F-17 விமானங்களை பயன்படுத்துவதில்லை என்பது இங்கு கவனிக்க வேண்டிய விடயமாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X