Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 டிசெம்பர் 08 , மு.ப. 06:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்களில் கடமையாற்றும் சில அதிகாரிகளால் எமது நாட்டு தொழிலாளர்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றமை மிகவும் கண்டனத்துக்குரிய விடயமாகுமென இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் கூட்டணி தெரிவித்துள்ளது.
மேற்படி அமைப்பின் தலைவர் றக்கீப் ஜௌபர், இன்று செவ்வாய்க்கிழமை (08) ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
உறவுகளைத் துறந்து பல தியாகத்துக்கு மத்தியில் வெளிநாடுகளில் தொழில் புரியும் எமது மக்களுக்கு ஆறுதலாகவும் பாதுகாப்பாகவும் அடைக்கலமாகவும் செயற்பட வேண்டிய எமது தூதரக அதிகாரிகளில் சிலர், வேலியே பயிரை மேய்வது போல் செயற்படுவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
பொதுவாக மத்திய கிழக்கிலுள்ள இலங்கை தூதரகங்களில் நடைபெறும் அசௌகரிகங்கள், தாமதமான சேவைகள், மட்டுபடுத்தப்பட்ட சேவைக் காலம் மற்றும் சிநேகபூர்வமற்ற மக்கள் தொடர்பாடல் போன்ற விடயங்களில் அரசாங்கம் கவனம் செலுத்த முன்வர வேண்டும்.
தொடர்ந்தும் நடைபெறும் இவ்வாறான சம்பவங்களை அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருப்பதும் வருத்தமளிக்கின்றது.
எனவே, இப்பிரச்சினைக்கு அரசாங்கம் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றும் தூதரகங்களுக்குத் தேவையான மேலதிக வளங்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும் தொழிலாளர்களின் நலன்களில் அக்கறையின்றி செயற்படும், குறித்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அரசாங்கத்தை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றேன் என அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago