2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

இலங்கை மீனவர்கள் மூவர் கைது

George   / 2016 மார்ச் 13 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

சங்கமன்கந்தை மற்றும் திருக்கோவில் பிரதேசங்களுக்கு அண்மித்த கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இலங்கை மீனவர்கள் மூவரை நேற்று சனிக்கிழமை கைதுசெய்ததாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு பயன்படுத்திய ஒரு சோடி துடுப்புகள், ஜீ.பி.எஸ் கருவி, கடலில் முக்குளிப்பதற்காக பயன்படுத்தப்படும் ஒக்சிஜன் சிலிண்டர் 10 மற்றும்  26 சங்குகள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் கூறினர்.

கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் என்பன மேலதிக விசாரணைக்காக ஒலுவில் உதவி கடற்றொழில் பணிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் மேலும் கூறினர்.

படங்கள்: கடற்படை


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X