2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

இலங்கையில் கஞ்சா பயிரிட்டு வெளிநாட்டுக்கு அனுப்பத் திட்டம்

Princiya Dixci   / 2016 மே 12 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் கஞ்சாச் செடிகளை வளர்த்து, மேற்கத்தேய நாடுகளின் மூலிகை மருத்துவ உற்பத்திகளுக்காக அனுப்பிவைக்கும் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இதன்பிரகாரம், இலங்கையில் கஞ்சாச் செடிகளை வளர்த்து, ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். 

இலங்கை ஆயுர்வேத கூட்டுத்தாபனத்தினால் உற்பத்தி செய்யப்பட்ட புதிய மூலிகை மருந்து உற்பத்திகளை அறிமுகப்படுத்தும் நிகழ்வு, கொழும்பு வோட்டர்ஸ் எஜ் ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இதன்போது கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், 'கடந்த காலங்களில், ஆயுர்வேத மூலிகை மருந்து உற்பத்திக்கு அபின் போதைப்பொருளின் பற்றாக்குறையொன்று நிலவியது. அதனால், அவற்றை  இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்து, அந்த மூலிகை மருந்து உற்பத்திகளை மேற்கொண்டோம். 

இதேபோன்று, வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் மூலிகை மருந்து உற்பத்திகளுக்குத் தேவைப்படும் கஞ்சாவினை, எமது நாட்டில் வளர்த்து, அவற்றை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளோம்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X