2025 மே 21, புதன்கிழமை

இலங்கை வருகிறார் நோர்வே வெளிநாட்டு அமைச்சர்

Kogilavani   / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நோர்வேயின் வெளிநாட்டமைச்சர் போர்கே பிரென்டே,  விஜயமொன்றை மேற்கொண்டு, அடுத்தாண்டு ஆரம்பத்தில் இலங்கைக்கு வரவுள்ளார்.

ஜனவரி 2016இன் முதல்வாரத்தில் இலங்கைக்கு வரவுள்ள அமைச்சர், வர்த்தக, முதலீட்டு வாய்ப்புகள் உள்ளடங்கலாக, இலங்கைக்கும் நோர்வேக்குமிடையிலான கூட்டுறவுக்கான வாய்ப்புகள் குறித்து, உயர்மட்டக் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார். இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த இலங்கை வர்த்தகக் கழகம், இலங்கையிலுள்ள நோர்வேத் தூதரகமும் இலங்கை வர்த்தகக் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்யவுள்ள கலந்துரையாடலொன்றில், ஜனவரி 7ஆம் திகதி அவர் பங்குகொள்வார் எனத் தெரிவித்துள்ளது.

இலங்கையில் முதலீடு செய்வதற்கு, நோர்வேயைச் சேர்ந்தோரின் ஆர்வம் அதிகரித்துள்ள பின்னணியிலேயே, அமைச்சரின் இந்த விஜயம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .