2025 ஜூலை 14, திங்கட்கிழமை

இலங்கை கிரிக்கெட் துறைக்காக இந்தியாவின் உதவியை நாடிய அமைச்சர் அர்ஜுண

Editorial   / 2018 ஒக்டோபர் 21 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் துறையில் இடம்பெறும் போட்டி காட்டிக்கொடுப்பு, ஊழல், கிரிக்கெட் சூதாட்டம் போன்றவற்றைத் தடுப்பதற்காக, இந்தியாவின் உதவியை கனிய வள அமைச்சர் அர்ஜுண ரணதுங்க கோரியுள்ளார்.

அத்துடன் இந்த விடயத்தில் இந்தியா பின்பற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் தொழிநுட்பம் தொடர்பான பயிற்சிகளை இலங்கைக்கு பெற்றுக்கொடுக்குமாறும்    அமைச்சர் அர்ஜுண ரணதுங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமருடன் ரணிலுடன் இந்தியாவுக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்த அமைச்சர் அர்ஜுண ரணதுங்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

இதன்போது கருத்துத்  தெரிவித்துள்ள இந்தியப் பிரதமர், இந்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இந்திய கிரிக்கெட் ஊழல் ஒழிப்பு வேலைத்திட்டம் தொடர்பில் அனுபவமிக்கவரெனவும் எனவே இந்த விடயம் குறித்து அவருடன் கலந்துரையாடுவதாகவும் இதற்கான ஏற்பாடுகளை இந்திய அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டுமெனவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அர்ஜுண ரணதுங்கவின் கோரிக்கைக்கு பதிலளித்துள்ள இந்திய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ராஜ்நாத் சிங், இதுதொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு இந்தியா ஒத்துழைப்பு நல்குமென்று அவர் தெரிவித்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .