2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

இலங்கை-பிலிப்பைன்ஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

Editorial   / 2019 ஜனவரி 16 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி லொட்ரிகோ டியுடேர்ட்  ஆகியோருக்கிடையில், இரு தரப்பு கலந்துரையாடலொன்று இன்று(16) இடம்பெறவுள்ளது.

இரு நாடுகளுக்குமிடையிலான அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிலிப்பைன்ஸ் விஜயம் அமைந்துள்ளதுடன், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சிலவற்றிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிடவுள்ளாரென, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நான்கு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (15) பிலிப்பைன்ஸ் நோக்கிப் பயணமானார்.

இவ்வருடத்தில் ஜனாதிபதியின்  முதலாவது வெளிநாட்டு விஜயமாக இது அமைந்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டு ஜனாதிபதியின் அழைப்பின் பேரிலேயே ஜனாதிபதி அந்நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

1961 ஆம் ஆண்டு முதல் பிலிப்பைன் நாட்டுடன் இராஜதந்திர உறவை இலங்கை பேணி வருவதுடன், 1978 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கைத் தலைவர் ஒருவர் அந்நாட்டின் அழைப்பை  ஏற்று விஜயம்  மேற்கொண்டுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .