2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

இலங்கை வருகின்றார் ஹிருத்திக் ரோஷன்

Freelancer   / 2025 ஜூலை 24 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்காசியாவின் முதல் ஒருங்கிணைந்த சொகுசு ரெசோர்ட்டான சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் (City of Dreams Sri Lanka) பிரமாண்ட திறப்பு நிகழ்வுக்காக இந்தி சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோஷன் அடுத்த மாதம் இலங்கைக்கு வருகை தர உள்ளார்.

சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஹிருத்திக் இந்த நிகழ்வில் கலந்து கொள்வதை உறுதிப்படுத்தினார்.

முன்னதாக குறித்த விழாவுக்கு ஷாருக்கான் வருகைத்தர இருந்தார். எனினும் தவிர்க்க முடியாத காரணத்தினால் அவர் இதிலிருந்து விலகினார்.

இந்த நிலையில், ஷாருக்கானுக்கு நிகரான வேறு யார் இந்த நிகழ்வுக்கு வருவார் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில், தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது.

தனது வருகை குறித்து ஹிருத்திக் ரோஷன் கூறியிருப்பதாவது,

"ஆகஸ்ட் 2 ஆம் திகதி உண்மையிலேயே சிறப்பு வாய்ந்த ஒன்றுக்காக - சிட்டி ஆஃப் ட்ரீம்ஸின் பிரமாண்டமான திறப்பு விழாவிற்காக அழகான தீவு நாடான இலங்கைக்குச் செல்வேன். கொழும்பை அனுபவிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் - துடிப்பான, ஆத்மார்த்தமான, இன்னும் கண்டுபிடிக்கப்படக் காத்திருக்கும் ஒரு அற்புதமான கடலோர தலைநகரம். சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் இலங்கையாக போகலாம், போகலாம்! உங்கள் அனைவரையும் மிக விரைவில் சந்திப்போம்." என்றார். R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X