2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

இலங்கை வருகிறார் எலிஸ் வேல்ஸ்

Editorial   / 2019 ஓகஸ்ட் 08 , பி.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க உதவி செயலாளர் எலிஸ் வேல்ஸ், இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். 

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி செயலாளர் எலிஸ் வேல்ஸ், தற்போது பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

கடந்த 6 ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் 16 ஆம் திகதி வரை பாகிஸ்தான், இலங்கை மற்றும் இந்தியாவுக்கு அவர் விஜயம் செய்யவுள்ளதாக அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. 

இதன்படி, பாகிஸ்தான் விஜயத்தை நிறைவுசெய்த பின்னர் எலிஸ் வேல்ஸ், இலங்கை மற்றும் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது, அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் எலிஸ் வேல்ஸ் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .