2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

இலங்கைக்கு ஆதரவளிப்போம்: பொரிஸ் ஜோன்சன்

Freelancer   / 2022 செப்டெம்பர் 02 , பி.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார, சமூக சவால்களுக்கு மத்தியில், பிரித்தானியா இலங்கை மக்களுக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். 

இலங்கையின் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க அவர்கள் பதவியேற்றமைக்கு வாழ்த்துத் தெரிவித்து அனுப்பியுள்ள செய்தியில் பிரித்தானியப் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகாண்பதற்கு முன்னுரிமையளிக்கும், அரசாங்கமொன்றை நிறுவுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் எடுத்துள்ள முயற்சிகளுக்கு பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஜனநாயக கொள்கைகளை பின்பற்றுவது, ஜனநாயக இணக்கப்பாட்டை எட்டுவது என்பன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புடன் மிக விரைவில் உங்களால் முன்னேற்றத்தைக் காண முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு. இவ்விடயத்தில் இலங்கைக்கு உதவ, தமது சர்வதேச பங்குதாரர்களுடன் பிரித்தானியா இணைந்து செயற்பட காத்திருப்பதாகவும் என்றும் பொரிஸ் ஜோன்சன்  குறிப்பிட்டுள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .