2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

இலங்கைக்கு ஆதரவாக செயற்பட தயார்: சீனா

Freelancer   / 2022 செப்டெம்பர் 03 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு ஆதரவாக ஏனைய நாடுகளுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார் என சீனா தெரிவித்துள்ளது.

தற்போதைய சிரமங்கள் மற்றும் கடன் சுமையை குறைப்பதற்கும் நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கும் இலங்கையின் பதிலளிப்புக்கு தொடர்ந்தும் சாதகமான பங்களிப்பை வழங்குவதற்கு தொடர்புடைய நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற சீனா தயார் நிலையில் உள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சாவோ லிஜியன் தெரிவித்துள்ளார்.

இலங்கை எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் சவால்கள் தொடர்பில் சீனா உன்னிப்பாக அவதானம் செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .