2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

இலங்கைக்கு கடத்த தயாராக இருந்த போதைப்பொருள்

Freelancer   / 2022 பெப்ரவரி 22 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 30 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருளை தமிழக கியூ பிரிவு பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம், வேம்பார் கடற்கரையில் தூத்துக்குடி கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜீவமணி வேல்ராஜ், வேலாயுதம், சுரேஷ்குமார் மற்றும் பொலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கடற்கரையில் நின்று கொண்டிருந்த படகில் இருந்த 8 பேர் கொண்ட கும்பலை சுற்றிவளைத்து சோதனை செய்ததில், அவர்களிடம் 2 கிலோ வீதம் 5 பக்கெட்டுகளில் கிரிஸ்டல் மெத்தாம் பேட்டமைன் எனும் ஐஸ் போதைப் பொருளை வைத்திருப்பது தெரியவந்தது. 

மேலும் அதனை அவர்கள் இலங்கைக்கு கடத்த முயன்றதாக கூறப்படுகிறது. 

இது தொடர்பாக கீழவைப்பார் பரலோக மாதா கோவில் தெருவைச் சேர்ந்த இருதய வாஸ் , கிங் பேன், சிலுவை,அஸ்வின், வினிஸ்டன், சுபாஷ், கபிலன், சைமோன், ஆகிய 8 பேரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் அவர்களிடம் இருந்த ரூ.30 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X