2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

இலங்கைக்கு விசா வழங்குவதனை நிறுத்தவில்லை

Freelancer   / 2022 மே 13 , பி.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய உயர் ஸ்தானிகராலயம், இந்திய கொன்சுலேட் ஜெனரல் அலுவலகங்கள் மற்றும் இந்திய துணை உயர் ஸ்தானிகராலயம் ஆகியவை விசா வழங்குவதனை நிறுத்தியிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகளை இந்திய உயர் ஸ்தானிகராலயம் முற்றாக நிராகரிக்கின்றது.

தமது  விசா பிரிவில் பணியாற்றுபவர்களில் பெருமளவானவர்கள் இலங்கை பிரஜைகளாக இருப்பதுடன் கடந்த சில நாட்களாக அவர்கள் அலுவலகத்திற்கு வருகைதர முடியாமை காரணமாக, நடைமுறை ரீதியானசில தடங்கல்கள் ஏற்பட்டுள்ளன. வழைமைபோல எமது செயற்பாடுகளை விரைவில் மேற்கொள்வதற்கான முயற்சிகளை நாம் முன்னெடுத்துள்ளோம் எனவும் தூதரகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்தியாவுக்கான பயணத்தை இலங்கையர்கள் இலகுவாக மேற்கொள்வதற்குரிய வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கும் நாம் உறுதிபூண்டுள்ளோம். இலங்கையில் இந்தியர்களுக்கு கிடைக்கும் வரவேற்பைப்போலவே இலங்கையர்களும் இந்தியாவில் வரவேற்கப்படுகின்றார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .