2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

இலங்கைத் தமிழர்களுக்கான சிறப்புத் திட்டங்களை அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

Editorial   / 2021 ஓகஸ்ட் 27 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அதன்படி, இலங்கை தமிழர்கள் முகாம்களில் உள்ள 7,469 பழுதடைந்த வீடுகள் 231 கோடி செலவில் கட்டித்தரப்படும் என்றும், அவர்கள் குழந்தைகள் கல்விக்காக 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதகாவும் அறிவித்தார்.

மேலும் இலங்கை வாழ் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குதல், இலங்கை திரும்ப விரும்பும் பகுதிகள் ஆய்வு செய்தல் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றிட பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், பொதுத்துறை செயலர், முகாம்வாழ் தமிழர்களுக்கான பிரதிநிதி அடங்கிய குழு அமைக்கப்படும் என்று கூறினார்.

அத்துடன் இலங்கை வாழ் தமிழர்களுக்கு மேம்படுத்தப்பட்ட வாழ்க்கையை அமைத்து தருவதை அரசு உறுதி செய்யும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும் இலங்கை தமிழ் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு ரூபாய் 2,500லிருந்து ரூபாய்10,000 ஆகவும், கலை மற்றும் அறிவியல் மாணவர்களுக்கு ரூபாய் 3,000ல் இருந்து ரூபாய் 12,000 ஆகவும், இளநிலை தொழிற்கல்வி மாணவர்களுக்கு ரூபாய் 5,000ல் இருந்து ரூபாய் 20,000 ஆக உதவித்தொகை உயர்த்தப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

அத்துடன் இலங்கை தமிழர்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று  சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில் இலங்கை தமிழ் அகதிகளின் வாழ்வாதாரத்திற்காக பல்வேறு அறிவிப்புக்களை சட்டப்பேரவையில் வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சட்டமன்ற கட்சித்தலைவர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X