2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

’இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் திமுக நாடகமாடுகின்றது’

Editorial   / 2019 டிசெம்பர் 18 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைத் தமிழர்களை ஏமாற்றுவதற்கு திராவிட முன்னேற்ற கழகம் நாடகம் நடத்துவதாக  தமிழக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னையில் இருந்து புறப்பட்டார். 

முன்னதாக அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில்,

“திமுக நடத்தும் அனைத்துக்கட்சி கூட்டம் என்பது சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது. இரட்டை வேடம் போடும் திமுக அரசியலுக்காக அனைத்து கட்சி கூட்டம் நடத்துகிறது. 

இலங்கை தமிழர்களை ஏமாற்ற திமுக போடும் நாடகத்தை மக்கள் பரிந்துகொள்வார்கள்.

உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் நீதிமன்ற நேரத்தை திமுக தலைவர் ஸ்டாலின் வீணடிக்கிறார். தமிழகத்துக்கு வரவேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை கேட்டு பெற நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .