Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 ஜனவரி 06 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசு, மத்திய அரசினை வலியுறுத்தும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று (06) தொடங்கியது.
முதல் நாளான இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சட்டசபையில் உரையாற்றினார்.
அதன்போது, “இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசு, மத்திய அரசினை வலியுறுத்தும்.
தமிழக மக்கள், எந்த ஒரு மதத்தையோ அல்லது சமயத்தையோ பின்பற்றினாலும், அவர்கள் அனைவரின் நலன்களும் பாதுகாக்கப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்யும்” என்றும் கூறியுள்ளார்.
அத்துடன், “இன்றைய நிலவரப்படி, 17 மீனவர்கள் மட்டுமே இலங்கை அரசின் சிறைக் காவலில் உள்ளனர். அவர்களையும் விரைவில் விடுவிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்றும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சட்டசபையில் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago
7 hours ago