Editorial / 2021 ஜனவரி 06 , மு.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல முன்வைத்த, இலங்கைப் பத்திரிகை பேரவை சட்டத்தைத் திருத்துவதற்கான யோசனைக்கு, அமைச்சரவை அங்கிகாரமளித்துள்ளது.
இலங்கைப் பத்திரிகை பேரவையின் சட்ட ஏற்பாடுகள், பத்திரிகைகளுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டுள்ளதால்,பத்திரிகை பேரவையை கட்டமைப்பு ரீதியாக மறுசீரமைத்து, இலத்திரனியல், அச்சுஇ நவீன ஊடகங்களை உள்ளடக்கும் வகையிலும் ஊடகக் கல்வியை ஊக்குவிக்கும் மையமாகவும் மீள்க்கட்டமைக்கப்பட வேண்டுமென இனங்காணப்பட்டுள்ளது.
இதற்கமைய, சமகாலத்துக்குப் பொருத்தமான வகையில், இலங்கைப் பத்திரிகை பேரவைச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக, கல்வியியலாளர் குழு ஒன்றை நியமிக்கவும் அதற்கான கருத்துகள், யோசனைகளை மக்கள், சிவில் அமைப்புகளிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
செய்திகள் பிரசுரிக்கப்படுவதால் பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுப்பதற்காகவும் ஊடகவியலாளர்களுக்கும் மக்களுக்கும் இடையிலான நல்லெண்ணத் தொடர்புகளை ஏற்படுத்துவதற்காக, 1973ஆம் ஆண்டு 5ஆம் இலக்க இலங்கைப் பத்திரிகை பேரவை சட்டத்தால் இலங்கைப் பத்திரிகை பேரவை நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago