2025 ஜூலை 10, வியாழக்கிழமை

இலங்கையர் ஒருவர் குவைட்டில் பலி

Editorial   / 2018 நவம்பர் 04 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையைச் சேர்ந்த நபரொருவர்  குவைட்டின் ஹவாலி பகுதியிலுள்ள தொடர்மாடி குடியிருப்பு ஒன்றின் 9 ஆவது மாடியிலிருந்து பாய்ந்து உயிரிழந்துள்ளாரென, குவைட் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

உயிரிழந்த நபருக்கும் அவரது மனைவிக்கும் இடையில் வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளதுடன் குறித்த நபர் அவரது மனைவியை  பல முறை கத்தியால் குத்திய பின் மாடியிலிருந்து பாய்ந்து உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த மனைவி முபாரக் வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறாரென அந்தப் பத்திரிகை மேலும் செய்தி வெளியிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .