2026 ஜனவரி 24, சனிக்கிழமை

இலங்கையர்களின் குடும்பங்களுக்கு 197 மில்லியன் ரூபாய் இழப்பீடு

Freelancer   / 2026 ஜனவரி 24 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டாரில் பணியாற்றியபோது உயிரிழந்த இலங்கையர்களின் குடும்ப உறவினர்களுக்காக 2025ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 197,719,710.36 ரூபாயை  தோஹாவிலுள்ள இலங்கைத் தூதரகம் பெற்றுக்கொடுத்துள்ளது. 

இதில் 23,641,182.00 ரூபா பணம் தூதரகத்தின் ஊடாக நேரடியாக உரிய குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

ஏனைய 174,078,528.36 ரூபா பணம், இலங்கையிலுள்ள குடும்ப உறவினர்களிடம் ஒப்படைப்பதற்காக கொழும்பிலுள்ள வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

விசேடமாக, 2014 ஆம் ஆண்டு முதல் தீர்க்கப்படாமல் இருந்த சில வழக்குகள் தொடர்பான இழப்பீட்டுத் தொகைகளையும் இம்முறை பெற்றுக்கொள்ள முடிந்தமை குறிப்பிடத்தக்கது. 

எவ்வாறாயினும், கடந்த 2024 ஆம் ஆண்டிலும் இத்தூதரகம் 172 மில்லியன் ரூபாவுக்கும் அதிக இழப்பீட்டுத் தொகையை இலங்கை குடும்பங்களுக்குப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X