2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

இலங்கையர்களை அழைத்து வரும் பணி ஒத்திவைப்பு

Editorial   / 2020 ஓகஸ்ட் 26 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்தின் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இடப்பிரச்சினை காணப்படுவதால், இஸ்ரேல் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிலுள்ள இலங்கைத் தூதரகம் இது ​தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

மீண்டும் இலங்கைக்கு வரும் எதிர்பார்ப்பிலுள்ள இலங்கையர்களுக்காக இலங்கைத் தூதரகம் இந்த விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த மாதம் 30ஆம் திகதி, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட விமானம் மூலம், இஸ்ரேலிலுள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு வரவிருந்த நிலையிலேயே, தூதரகம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .