2025 மே 03, சனிக்கிழமை

இலங்கையிலிருந்து வெளியேறிய இஸ்ரேலியர்கள்

Janu   / 2024 ஒக்டோபர் 24 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த இஸ்ரேலிய பிரஜைகள் 22 பேர் வியாழக்கிழமை (24) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளனர்.

இலங்கையின் கிழக்குப் பிரதேசத்தில் உள்ள அறுகம்பை பகுதியில் வைத்து இஸ்ரேலியர்கள் மீது  பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்ததால் மேலும்  இலங்கையில் தங்கியிருப்பது ஆபத்தானது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகமும், இஸ்ரேலிய அரசாங்கமும் அறிவித்ததையடுத்து குறித்த இஸ்ரேலியர்களை பாதுகாப்பாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு அவர்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இஸ்ரேலுக்கு ஒரு நிலையான கால அட்டவணைக்கமைய விமானங்கள் இல்லாததால், அவர்கள் துபாய்க்கு சென்று அங்கிருந்து இஸ்ரேல் செல்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X