Freelancer / 2025 டிசெம்பர் 03 , மு.ப. 08:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
'டித்வா' புயலின் பேரழிவால் இலங்கையில் பாதிக்கப்பட்ட 14 லட்சம் பேரில், 275,000 இற்கும் அதிகமான சிறுவர்கள் அடங்குவதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் தெரிவித்துள்ளது.
தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்துத் தடைகள் காரணமாக உண்மையான பாதிப்பு எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என்றும் அந்த நிதியம் கவலை வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி எம்மா பிரிகாம் கூறுகையில், சிறுவர்களுக்கு அவசரமாக உதவி தேவைப்படுகிறது. உயிர் காக்கும் சேவைகள் தேவைப்படும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களைச் சென்றடைவது ஒரு காலக்கெடுவுக்கு எதிரான போட்டியாக உள்ளது என்று வலியுறுத்தியுள்ளார். (a)
2 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago