S.Renuka / 2025 டிசெம்பர் 03 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாரிய அழிவை ஏற்படுத்திய 'டிட்வா' (Ditwa) புயலால் இலங்கையில் சுமார் 275,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதிய இலங்கைக்கான பிரதிநிதி எமா பிரகாம் (Emma Brigham) தெரிவித்துள்ளார்.
யூனிசெஃப் மேற்கொண்ட ஆரம்ப மதிப்பீட்டின் அடிப்படையிலேயே இந்தக் கண்டுபிடிப்புகள் வெளியாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், பல பகுதிகளில் இன்னும் சாலை மற்றும் தகவல் தொடர்பு தடைகள் நிலவுவதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதைவிட அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் எமா பிரகாம் தெரிவித்துள்ளார்.
இந்தச் சூறாவளியால் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கான அத்தியாவசிய சேவைகள் தடைப்பட்டுள்ளமை குறித்து யூனிசெஃப் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .