Freelancer / 2025 நவம்பர் 30 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 212 பேராக அதிகரித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 இலட்சத்தை நெருங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மதியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனர்த்தங்களில் சிக்கி 218 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களால் 2,73,606 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 9,98,918 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாடு முழுவதும் 1,275 பாதுகாப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றில் 51,228 குடும்பங்களைச் சேர்ந்த 1,80,499 நபர்கள் தற்போது பாதுகாப்பாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகள் மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. R
56 minute ago
59 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
59 minute ago
2 hours ago