2025 மே 09, வெள்ளிக்கிழமை

இலங்கையில் சீன வெளியுறவுத்துறை பிரதி அமைச்சர்

Editorial   / 2023 மே 30 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீன மக்கள் குடியரசின் வெளிவிவகார பிரதி அமைச்சர் சன் வெய்டாங், இரு நாடுகளுக்கும் இடையிலான 12 ஆவது சுற்று இராஜதந்திர ஆலோசனைகளுக்கு இணைத் தலைமை தாங்குவதற்காக, வெளிவிவகார அமைச்சின் தூதுக்குழுவை  மே 29 முதல் ஜூன் 01 வரை இலங்கைக்கு அழைத்து வந்துள்ளார்.

இரு நாடுகளும் அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாசார ஒத்துழைப்பை உள்ளடக்கிய இருதரப்பு உறவுகளின் நிலையை மதிப்பிடுவதற்கும், கருப்பொருள் ஒத்துழைப்பு மற்றும் மக்களிடையேயான தொடர்புகளை மதிப்பிடுவதற்கும் இந்த கலந்துரையாடல்கள் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விஜயத்தின் போது, ​​சீன வெளிவிவகார பிரதி அமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய ஆகியோரை சந்திக்க உள்ளார்.

இலங்கை – சீனா பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடும் தூதுக்குழுவானது தெவனகலவில் உள்ள இலங்கை – சீனா நட்பு கிராமத்துக்கு விஜயம் செய்யவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X