2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

இலங்கையில் முதல் ஆதிவாசி பலி

Freelancer   / 2021 ஓகஸ்ட் 07 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வா

இலங்கையின் ஆதிவாசி ஒருவர் முதல் முறையாக கோவிட் 19 தொற்றினால் சிகிச்சை பயனளிக்காமல் நேற்று உயிரிழந்தார்.

பண்டாரவளை அரசினர் மருத்துவமனையிலேயே, மேற்படி மரணம் பதிவாகி உள்ளது.

பதுளை மாவட்டத்தைச் சேர்ந்த தம்பானை என்ற ஆதிவாசிகள் கிராமத்தைச் சேர்ந்த 65 வயதுடைய எய்ச். எம். குணதாச என்ற ஆதிவாசியே  உயிரிழந்தவராவார்.

இவ் ஆதிவாசி நீண்டகாலமாக சிறுநீரக நோயினால் அவஸ்தைபட்டு, சிகிச்சை பெற்று வந்தவராவார். 

இவர் நோய் காரணமாக, பண்டாரவளை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

இந்நிலையில் இவர் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்த வேளையில், இவர் கோவிட் 19 தொற்றுக்கு உள்ளானமை தெரியவந்துள்ளது.

ஆதிவாசிகளின் முதல் மரணம் இதுவென பதிவாகியுள்ளது.

தம்பானை ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரியலாகே வன்னியலத்தோ, தமது கிராமத்தைச் சேர்ந்த ஆதிவாசியொருவர், கோவிட் 19 தொற்றினால் உயிரிழந்திருப்பதையும் உறுதிபடுத்தியுள்ளார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X