2025 மே 17, சனிக்கிழமை

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை கலைக்க தீர்மானம் எடுக்கப்படவில்லை

Thipaan   / 2015 செப்டெம்பர் 07 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலஞ்ச ஊழல்கள் தொடர்பாக விசாரணை செய்யும் ஆணைக்குழுவைக் கலைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்படவில்லை என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கலைக்கப்படவுள்ளதாக, இவ்வாரம் சில தினசரி பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் இன்று திங்கட்கிழமை(07) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,

இலஞ்ச ஊழல்கள் தொடர்பாக விசாரணை செய்யும் ஆணைக்குழுவை அமைத்தல் அதற்கான அங்கத்தவர்களை நியமித்தல் மற்றும் நீக்குதல் என்பன 19ஆவது அரசியல் யாப்பின்படி நடைபெறவேண்டும். அதன்படி, இலஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவை கலைப்பதற்கு அதிகாரம் இல்லை.

எவ்வாறானபோதும் அரசியல் யாப்பு சபை அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து சகல ஆணைக்குழுக்களுக்கும் ஆணையாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .