2025 செப்டெம்பர் 01, திங்கட்கிழமை

இவ்விருவரையும் உங்களுக்குத் தெரியுமா?

Editorial   / 2025 செப்டெம்பர் 01 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஒரு பெண்ணிடம் ரூ. 3 மில்லியன் மோசடி செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபரான பெண்ணையும், கூர்மையான ஆயுதத்தால்  பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்த சந்தேக நபரையும் கைது செய்ய பொலிஸ் தலைமையகம் பொதுமக்களின் உதவி கோருகிறது.

சந்தேக நபர் தங்களிடம் ரூ. 3 மில்லியன் மோசடி செய்ததாக 5 பெண்கள் றக்வானை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய றக்வானை பொலிஸார்  விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.

அதன்படி, றக்வானை, பொதுப்பிட்டிய, கனடகம பகுதியைச் சேர்ந்த தலுகொட ஆராச்சிலகே ஹர்ஷனி பிரியந்திகா என்ற 40 வயதுடைய பெண்ணைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள், றக்வானை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியை 071 859 1394 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொள்கிறது.

படத்தில் இருக்கும் ஆண், மத்துகம, டோலஹேனவத்தே பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் ஒரு பெண்ணின் கழுத்தை ஏப்ரல் 18 ஆம் திகதி அறுத்த குற்றத்திற்காக தேடப்படும் 41 வயதுடைய பிராமணகே டான் சனத் ரவீந்திர நிலந்த ஆவார் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் தற்போது அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுவிட்டார், அவரை கைது செய்ய விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. சந்தேக நபர் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால், 071 859 1700 என்ற எண்ணில் மத்துகம உதவி பொலிஸ் கண்காணிப்பாளரை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொள்கிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X