2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

இஸ்ரேலில் இலங்கையர் ஒருவர் கொடூரமாக கொலை

Freelancer   / 2025 நவம்பர் 14 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்ரேலில் நேற்றிரவு இலங்கை தொழிலாளி ஒருவர் ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். 

 டெல் அவிவ் நகரின் கடற்கரை பகுதியொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அங்குள்ள இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். 

கொலை செய்யப்பட்டவர் காலி, படபொல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. 

இவர் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் இஸ்ரேலில் கட்டுமானத் துறையில் வேலைக்காகச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் மோதலாக மாறியதன் காரணமாக, அவர்  இலங்கையரைக் கொலை செய்துள்ளதாக நிமல் பண்டார கூறினார். 

இதன்படி, சந்தேகநபரை கைது செய்வதற்காக இஸ்ரேல் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.  R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .