Freelancer / 2025 செப்டெம்பர் 24 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
இஸ்ரேலின் எரிக்கா ஏர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான புதிய விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகைத் தர உள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலிருந்து கட்டுநாயக்க வரை ஆரம்பிக்கப்பட உள்ள புதிய விமான சேவை தொடர்பில் செவ்வாய்க்கிழமை (23) தனது உத்தியோகபூர்வ முகபுத்தக தளத்தில் பதிவொன்றையிட்டு இவ்விடயம் தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளார்.
இஸ்ரேலின் எரிக்கா ஏர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான (IZ) – 639 என்ற விமானம் இன்று முதல் செவ்வாய்க்கிழமை தோறும் பிற்பகல் 6.30 மணிக்கு டெல் அவிவ் விமான நிலையத்திலிருந்து கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி பயணிக்க உள்ளது.
அதற்கமைய இன்று பயணமான விமானம் புதன்கிழமை காலை 6.15 மணியளவில் நாட்டை வந்தடைய உள்ளது. R
4 hours ago
9 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
22 Dec 2025