Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 செப்டெம்பர் 12 , மு.ப. 06:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈ.பி.டி.பி.யின் டக்ளஸ் தேவானந்தாவுடன் 18 ஆண்டுகள் ஒன்றாக இருந்த சதா எனும் சுப்பையா பொன்னையா என்பவர் ' நிமலராஜன்,அற்புதன் . நிக்கிலஸ் ஆகியோரை ஈ.பி.டி.பி தான் படுகொலை செய்வது என்று ஊடக சந்திப்பு நடத்தி அறிவித்துள்ளார் .
எனவே இது தொடர்பான விசாரணைகளை அரசு ஆரம்பிக்குமா எனக்கேள்வி எழுப்பிய தமிழரசுக்கட்சியின் யாழ் மாவட்ட எம்.பி.யுமான சிவஞானம் சிறீதரன்,அரசாங்கம் இராணுவத்தை பாதுகாக்கவே முயற்சிக்கிறது. .இலங்கை நீதியின் வழியில் செயற்பட்டிருந்தால் ஏன் வெளியக விசாரணைக்கு மறுக்க வேண்டும் எனவும் கேட்டார்
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) இடம் பெற்ற தேசிய கணக்காய்வு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கேள்விகளை எழுப்பிய அவர் மேலும் பேசுகையில்,
ஈ.பி.டி.பி.யின் டக்ளஸ் தேவானந்தாவுடன் 18 ஆண்டுகாலமாக ஒன்றாக இருந்த சதா எனும் சுப்பையா பொன்னையா என்பவர் 2025.09.09 ஆம் திகதியன்று யாழ்ப்பாணம்.ஊடக மையத்தில் ஊடக சந்திப்பொன்றை நடத்தி வெளிப்படையாக அறிவித்துள்ளார். அத்துடன் ஈ.பி.டி.பி தான் பல கொலைகளை செய்ததாகவும் சதா என்பவர் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பான விசாரணைகளை அரசு ஆரம்பிக்குமா?
நிமலராஜனின் கொலை முறையாக விசாரிக்கப்படவில்லை என்று சர்வதேச நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன. உண்மைகள் மூடி மறைக்கப்பட்டன.இசைப்பிரியா இலங்கை இராணுவத்தால் மிக மோசமாக கொலை செய்யப்பட்டார்.இதேபோல் பல பெண்கள் கொலை செய்யப்பட்டார்கள். நீங்கள் இராணுவத்தை பாதுகாக்கவே முயற்சிக்கின்றீர்கள்.இலங்கை நீதியின் வழியில் செயற்பட்டிருந்தால் ஏன் வெளியக விசாரணைக்கு மறுக்க வேண்டும்?. வெளியக பொறிமுறைக்குள் வராவின் இந்த நாட்டில் நீதி ,சமாதானம் மற்றும் நல்லிணக்கம் ஒருபோதும் உறுதிப்படுத்தப்படாது என்றார்.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago