2025 ஒக்டோபர் 09, வியாழக்கிழமை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணை தகவல்களை வெளியிடக்கூடாது: நீதி அமைச்சர்

Editorial   / 2025 ஒக்டோபர் 09 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன ஆகையால், அது தொடர்பான தகவல்களை வெளியிடக்கூடாது  என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பாராளுமன்றத்தில், வியாழக்கிழமை (09) தெரிவித்தார்.

 இந்தத் தகவல்களை வெளியிட பாராளுமன்றம் கூட உத்தரவிடக்கூடாது என்று அவர்   கூறினார்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்களுக்குப் பின்னணியில் உள்ள சூத்திரதாரி யார் என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விசாரணைகளை சீர்குலைக்க மறைமுக வழிகளில் முயற்சிப்பவர்களை அவ்வாறு செய்ய அனுமதிக்கக்கூடாது என்று அமைச்சர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X