2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

உக்ரேன் பயணிகளின் விசாவை நீடிக்க ஆலோசனை

Editorial   / 2022 பெப்ரவரி 27 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்நாட்டு மோதல்கள் காரணமாக சொந்த நாட்டுக்குத் திரும்ப முடியாத உக்ரேனிய சுற்றுலா பயணிகளுக்கான விசா காலத்தை நீடிக்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

  ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் நிலவும் முரண்பாட்டினால் சொந்த நாட்டிற்கு செல்ல முடியாத உக்ரேனிய சுற்றுலா பயணிகளின் விசாவை நீடிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகின்றது என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.  

இது தொடர்பில், நாளை (28) நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் பத்திரமொன்றை தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்த அவர், இந்த விவகாரம் தொடர்பில்   குடிவரவு குடியகல்வு திணைக்களத்துடன் வெளிவிவகார அமைச்சு ஏற்கெனவே கலந்துரையாடி வருகின்றது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .