2026 ஏப்ரல் 22, புதன்கிழமை

உக்ரேன் பயணிகளுக்கும் கதவுகள் மூடப்பட்டன

R.Maheshwary   / 2021 ஜனவரி 04 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு வருகைத் தந்துள்ள உக்ரேன் சுற்றுலாப் பயணிகளின் சீகிரியா மற்றும் பொலன்னறுவைக்கான சுற்றுலா பயணங்கள் அவசரமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதென, மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது.


நேற்று முன்தினம் யால பூங்காவுக்கு சுற்றுலா சென்ற குறித்த பயணிகள், சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு காரணமாக, சுற்றுலாத்துறை அமைச்சு விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இதற்கு தடைவிதித்ததாக மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு வருகைத் தந்துள்ள குறித்த உக்ரேன் பயணிகள், இன்றும் நாளையும்  மத்திய கலாசார நிதியத்தின் கட்டுபாட்டில் உள்ள பொலன்னறுவை மற்றும் சீகிரியா ஆகிய இடங்களைப் பார்வையிட இருந்ததாகவும் இதனால் உள்ள10ர் சுற்றுலாப் பயணிகளுக்கு குறித்த இடங்களை பார்வையிட அனுமதி வழங்கப்படாதென்றும் நிதியம் தெரிவித்திருந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .