2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

’உடனடியாக கொரோனா தொற்று குறையாது’

Freelancer   / 2021 ஓகஸ்ட் 23 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்ட பின்னர், கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரே நேரத்தில் குறையாது என்றும் இதற்காக யாரும் அச்சப்படவோ அல்லது மனச்சோர்வு அடையவோ கூடாது என்றும் ராகம மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டை மூடியதன் முடிவுகள் தெரிவதற்கு குறைந்தது இரண்டு வாரங்கள் செல்லும் என்று தெரிவித்த அவர், நாட்டை மூடுவதன் விளைவுகளை இன்றோ அல்லது நாளையோ எதிர்பார்க்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.

ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் மக்களை வீட்டிலேயே இருக்குமாறும் தேவையற்ற போக்குவரத்தை தவிர்க்குமறும் அவர் வலியுறுத்தினார்.

தடுப்பூசி போடப்படாத அனைவரும் இந்த நேரத்தில் தடுப்பூசி பெற ஆர்வம் காட்ட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

விசேடமாக 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி போடுவது முக்கியம் என்றும், கொரோனாவிலிருந்து விடுபட தடுப்பூசியே பிரதான தீர்வு என்றும் கூறினார்.

இலங்கையில் தற்போது பயன்பாட்டில் உள்ள அனைத்து தடுப்பூசிகளும் சுகாதார துறையின் அங்கீகாரம் பெற்றவை என்பதால், அவற்றை தேர்ந்தெடுக்க முயலாமல் எந்தத் தடுப்பூசியையாவது பெற்றுக் கொள்ளுமாறு மக்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .