Freelancer / 2026 மார்ச் 21 , மு.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் தற்போதைய சூழலை கருத்திற்கொண்டு, உணவு விநியோகத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் எரிபொருள் தேவைகளை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, எந்தவொரு அரச அமைப்பிலும் பதிவு செய்யப்படாத, உணவு விநியோகத்தில் ஈடுபட்டுள்ள தனிப்பட்ட போக்குவரத்து சேவையாளர்களை இலக்காக கொண்டு தரவு சேகரிப்பு முன்னெடுக்கப்படுகிறது.
இதன்மூலம் ஒட்டுமொத்த எரிபொருள் தேவையை மதிப்பீடு செய்து, மின்சக்தி அமைச்சு மற்றும் எரிபொருள் கூட்டுத்தாபனத்துக்கு (CPC) தேவையான பரிந்துரைகளை வழங்க வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளது.
தகுதியுள்ள போக்குவரத்து வழங்குநர்கள், அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள Google Form இணைப்பு அல்லது QR குறியீட்டைப் பயன்படுத்தித் தங்கள் விபரங்களைச் சமர்ப்பிக்க முடியும்.
இந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்வதன் மூலம் மாத்திரம், எரிபொருள் ஒதுக்கீடு (Quota) வழங்கப்படுவது உறுதி செய்யப்படமாட்டாது என்பதையும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. R
20 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
7 hours ago