2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

உடைந்த இயந்திரத்தை பழுதுபார்த்த சீனா

R.Maheshwary   / 2020 நவம்பர் 02 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லேரியா ஆரம்ப வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், கோளாறுக்குள்ளான பிசிஆர் இயந்திரம் சீர்செய்யப்பட்டுள்ளதென, இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

சீனாவிலிருந்து கொண்டு வரப்பட்ட குறித்த இயந்திரம் செயலிழந்ததால், பிசிஆர் பரிசோதனை அறிக்கைகளை உரிய தினத்தில் பெற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்படுவதாக சுகாதார பிரிவு தெரிவித்தது.

இதற்கமைய, குறித்த இயந்திரத்;தை பழுதுபார்க்க சீனாவிலிருந்து நிபுணர் குழுவொன்று இலங்கைக்கு வந்து, இயந்திரத்தை சீர்செய்துள்ளதென சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும் அந்த இயந்திரம் வைக்கப்பட்டுள்ள இரசாயனக் கூடமும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளதுடன்,இன்றிலிருந்து முறையாக பிசிஆர் பரிசோதனைகளை இங்கு முன்னெடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .