2025 மே 10, சனிக்கிழமை

உணவுகுழாயில் கொட்டிய தேனீ: இளைஞன் மரணம்

Mithuna   / 2023 டிசெம்பர் 11 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

நமது நாட்டை பொறுத்தவரையில், குளவி கூடுகள் கலைந்து கொட்டியதில் பலரும் பாதிக்கப்படுகின்றனர். ஒருசிலர் மரணித்தும் இருக்கின்றனர். மலையகத்திலேயே ​குளவி கொட்டுக்கள் அதிகரித்துள்ளன. வடக்கு, கிழக்கில் ஆங்காங்கே அவ்வப்போது குளவிகள் கலைந்து கொட்டிவிடும் சம்பவங்களும் இடம்பெறாமல் இல்லை.

எனினும், தேனீ ஒன்று, உணவுகுழாயில் கடித்தமையில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.

மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள பெரேசியா பகுதியைச் சேர்ந்தவர் ஹிரேந்திரா சிங் (வயது 22). வீட்டில் இருந்த போது தாகம் எடுத்துள்ளால், ஒரு டம்ளரில் தண்ணீரை எடுத்து குடித்துள்ளார்.

பின்னர், தண்ணீரை குடித்த சிறிது நேரத்திலேயே ஹிரேந்திரா சிங்கிற்கு சுவாச கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவருக்கு சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதனிடையே, மருத்துவர்கள், ஹிரேந்திரா சிங் சிகிச்சையின் போது வாந்தி எடுத்ததில் தேனீ ​ஒன்று வெளியில் வந்துதது, தேனீயானது அவரது உணவுகுழாய்க்குள் சென்று கடித்துள்ளதே ​இறப்புக்கு காரணம் என  தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X