Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2016 மே 06 , மு.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
அழகன் கனகராஜா
நாடாளுமன்றத்தில், கடந்த செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்ற களேபரம் தொடர்பிலான தீர்ப்பு, சபாநாயகர் கரு ஜயசூரியவினால், நேற்று வியாழக்கிழமை (05) வழங்கப்பட்டபோது, அவையில் சற்றுச் சலசலப்பு ஏற்பட்டது. தீர்ப்பு, சட்டவிரோதமானது என்று ஒரு சாராரும், தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்த முடியாது என்று மற்றொரு தரப்பினரும், இவ்விடயத்தை இத்துடன் நிறுத்திக் கொள்வோம் என்று சிரேஷ்ட உறுப்பினர்களும் கோரிநின்றனர். இதேவேளை, அவையில் இடம்பெற்ற அடிதடி வீடியோவை அம்பலப்படுத்துமாறு, ஜே.வி.பி கோரிநின்றது.
நாடாளுமன்றம், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்றுக் காலை 10.30க்குக் கூடியது. சபாநாயகர் அறிவிப்பின் போது, களேபரம் தொடர்பில் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட தீர்ப்பை சபாநாயகர் வாசித்தார்.
இதன்போது, எதிரணியினரும் ஆளுந்தரப்பினரும், நன்றாக காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தனர். தீர்ப்பு வாசிக்கப்பட்டதன் பின்னர், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர், ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பினர். இந்த விவகாரம், வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் இடைநடு வரையும் வியாபித்துச் சென்றது. எனினும், முன்னைய சபாநாயகர்களினது செயற்பாடுகளையும் தற்போதைய சபாநாயகரின் செயற்பாட்டையும் ஒப்பிட்டுக் காட்டியதன் பின்னரே, களேபரம் தொடர்பிலான தீர்ப்பின் மீதான வாத விவாதம் நிறைவுக்கு வந்தது.
பிரதியமைச்சரும் ஐ.தே.க எம்.பி.யுமான பாலித தெவரப்பெரும, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் எம்.பி.யான பிரசன்ன ரணவீர ஆகியோர், நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு ஒருவாரகாலத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் உறுப்பினர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தவுமே இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக அவர் அறிவித்தார்.
'கடந்த செவ்வாய்க்கிழமை, இச்சபையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடந்து கொண்ட முறையினால், இந்த அதியுன்னத சபையின் கண்ணியமும் நன்மதிப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் பாரிய வெறுப்புக்கு நாடாளுமன்றம் உள்ளாகியுள்ளது. எம்.பிக்களின் பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது. இவ்வாறான சம்பவங்கள் இனியும் இடம்பெற்றாது என்பதை உத்தரவாதப்படுத்த வேண்டியுள்ளது. நாடாளுமன்றத்தின் மரபுகளைப் பாதுகாக்க வேண்டிள்ளது' என்றார்.
அதன்பின்னர் எழுந்த சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்லவினால் இரு பிரேரணைகளும் முன்வைக்கப்பட்டன. முதலாவதாக, பாலித தெவரப்பெருமவுக்கான ஒருவார காலத் தடைக்கான பிரேரணை முன்வைக்கப்பட்டது. அதற்குச் சபை அங்கிகாரமளித்தது. அதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினரான பிரசன்ன ரணவீரவுக்கான ஒருவாரகாலத் தடை கோரும் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது. அதை ஒன்றிணைந்த எதிர்க்கட்சியனர் எதிர்த்தனர். எனினும், அதுவும் அங்கிகரிக்கப்பட்டது.
இதனையடுத்து, இரு எம்.பிக்களும், நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க ஒருவார காலம் தடைவிதிக்கப்பட்டது. அத்தடை, நாளை (இன்று) முதல் அமுலுக்கு வரும் என்று சபாநாயகர் அறிவித்தார். இதனையடுத்தே அவையில் சலசலப்பு ஏற்பட்டது. முன்னதாக எழுந்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எம்.பி.யான சந்திரசிறி கஜதீர, 'இந்தத் தீர்ப்பு, சட்டவிரோதமானது. அனுபவமான எம்.பி.க்களான தினேஷ் குணவர்தன மற்றும் பந்துல குணவர்தன ஆகியோரின் இன்றைய செயற்பாடுகள் தொடர்ந்தும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தீர்கள், அது தவறானதாகும்' என்றார்.
உடனடியாகவே எழுந்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், 'நாடாளுமன்ற உறுப்பினர்களின் கௌரவத்தையும் நாடாளுமன்றத்தின் கௌரவத்தையும் பாதுகாக்க வேண்டியது, சபாநாயகரான உங்களின் கடமையாகும். இந்த விவகாரத்தை, சபைக்கு வெளியே கொண்டுசெல்ல வேண்டிய தேவையில்லை. சபையின் கண்ணியத்தைப் பாதுகாப்பதற்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும் என்பதுடன், இந்த விவகாரத்தை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்' என்று கூறியமர்ந்தார்.
இவருக்குப் பின்னர் எழுந்த ஜே.வி.பி.யின் தலைவரும் எம்.பி.யுமான அநுர குமார திஸாநாயக்க, 'மக்கள் பிரதிநிதிகள் என்று கூறப்படுகின்றவர்கள், அவைக்குள் அன்று மேற்கொண்ட அடிதடி விவகாரம் தொடர்பிலான இன்றைய (நேற்று) தீர்ப்பில் அரசியல் சாயம் கலக்கப்படும். ஆகையால், இந்தக் களேபரம் தொடர்பிலான வீடியோவை, நாட்டு மக்களும் பார்க்க வேண்டும். மக்களே தீர்ப்பளிக்க வேண்டும் என்பதனால், அந்த வீடியோவை ஊடகங்களுக்கு வெளியிடவும்' என்று கோரி நின்றார்.
இதனிடையே எழுந்த எதிர்க்கட்சித் தலைவரும் எம்.பி.யுமான இரா.சம்பந்தன், 'அன்று அவையில் ஏற்பட்ட சம்பவமானது வருத்தப்படக்கூடிய விடயமாகும். எம்.பி ஒருவர், சக எம்.பியினால் தாக்கப்பட்டுள்ளார். அந்த விவகாரம் தொடர்பிலான அறிக்கை கிடைத்துள்ளது. அறிக்கையின் பிரகாரம், நீங்கள் (சபாநாயகர்) தீர்ப்பு எடுத்துள்ளீர்கள். ஆகையால், இந்த விவகாரத்தை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். சபையின் கௌரவத்துக்கு இன்னுமின்னும் பாதிப்பை ஏற்படுத்தக் இடமளிக்கக்கூடாது. சபையின் தார்மீகம் மற்றும் கௌரவத்தைப் பாதுகாக்க வேண்டும்' என்றார்.
குறுக்கிட்ட ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எம்.பி.யான பந்துல குணவர்தன, 'அன்றைய சம்பவம் தொடர்பிலான விசாரணையின் தீர்ப்பை, இன்று (நேற்று) அறிவிப்பதாகவே கூறினீர்கள். ஆனால், சபாநாயகர் அவர்களே! என்னுடைய பெயர் உட்பட தினேஷ் குணவர்தன உள்ளிட்ட இன்னும் சில எம்.பிக்களின் செயற்பாடுகள் தொடர்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் இன்று (நேற்று) செய்திகள் வெளியாகியுள்ளன. இது எவ்வாறு?' என்றும் வினவினார். 'உங்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. எனினும், தீர்ப்பும் பரிந்துரைகளும் எவ்வாறு முன்கூட்டியே வெளியாகின?' என்றும் அவர் கேட்டார்.
இதனிடையே எழுந்த ஒன்றிணைந்த எதிர்கட்சியின் எம்.பியானமஹிந்த யாப்;பா அபேவர்தன, 'நிலையியற்கட்டiயின் பிரகாரம் தீர்ப்பு வழங்கப்படுவதாகவே அறிவித்தீர்கள், அவ்வாறாயின், சம்பம் இடம்பெற்ற நேரமே பெயர்களைக் குறிப்பிட்டிருக்க வேண்டும். எனினும், 48 மணிநேரம் கழித்தே தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இது, நிலையியற் கட்டளைக்கு முரணானது. சட்டவிரோதமானது' என்றார்.
வாதவிவாதங்களுக்கு இடையில் குறுகிட்ட சபாநாயகர் கரு ஜயசூரிய, 'அன்றைய தினம், வேண்டாம், வேண்டாம் என்றேன். சம்பவம் தொடர்பில் கருத்துரைப்பதற்கு இடமளிப்பேன், கொஞ்சம் காத்திருங்கள் என்;கிறேன். நீங்கள் கேட்கவில்லை, தினேஷ் குணவர்தன எம்.பி, கீழே இறங்கினார். அன்று அவையின் நற்பெயருக்கே களங்கம் ஏற்படுத்தும் சம்பவம் இடம்பெற்று விட்டது' என்று சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றம் அதியுத்தம சபை என்பதை சகலரும் நினைவில் கொண்டு செயற்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, சபையின் அடுத்தகட்ட நடவடிக்கையான வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரம் ஆரம்பமானது.
கேள்வி நேரம் சுமுகமான முறையில் முன்னகர்ந்து சென்று கொண்டிருந்த நிலையில் குறுக்கிட்ட ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சிசிர ஜயகொடி, 'விசாரணை, சாதாரணமானதாக இருக்க வேண்டுமாயின், விசாரணையாளர் சாதாரணமானவராக இருக்க வேண்டும்.
எனினும், இந்த விவகாரத்தை விசாரணை செய்த பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபாலவுக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 50 பேர் இணைந்து, வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். அவருடைய நியமனத்தை சவாலுக்கு உட்படுத்தியே வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். அவ்வாறானவர்கள் செய்த விசாரணை எவ்வாறு இருக்கும்?' என்று கேள்வி எழுப்பினார்.
அதன் பின்னர் எழுந்த இராஜாங்க அமைச்சர் ரங்கே பண்டார, 'அக்கிராசனத்தின் தீர்ப்பைச் சவாலுக்கு உட்படுத்த முடியாது. அச்சந்தர்ப்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பத்தினால், உங்களால் (சபாநாயகரினால்) உடனடியாகத் தீர்மானம் எதையும் எடுக்க முடியாது' என்று சுட்டிக்காட்டினார்.
வாதப் பிரதிவாதங்களுக்கு இடையில் எழுந்த நாமல் ராஜபக்ஷ, 'சம்பவம் தொடர்பிலான தீர்ப்பு பிரச்சினையில்லை. எனினும், நிலையியற்கட்டளைதான் பிரச்சினையாகும். நிலையியற் கட்டளையின் பிரகாரம், சம்பவம் இடம்பெறும் போதே தீர்ப்பளிக்க வேண்டும். சிரேஷ்ட எம்.பி.க்களின் பெயர்களும் இந்தச் சிபாரிசுகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அவர்களிடம் விசாரிக்கப்படவில்லை' என்று சுட்டிக்காட்டினார்.
'இல்லை, இல்லை' என்று தெரிவித்த சபாநாயகர், 'சரண குணவர்தன (முன்னாள் பிரதியமைச்சர்) விவகாரத்தில், 21ஆம் திகதியே சம்பவம் இடம்பெற்றது. தீர்ப்போ 29ஆம் திகதியன்று வழங்கப்பட்டது' என்று சுட்டிக்காட்டினார். இதனிடையே எழுந்த விமல் வீரவன்ச எம்.பி, 'பிரதி சபாநாயகர், திலங்க சுமதிபால, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஹோமாகம தேர்தல் தொகுதியின் அமைப்பாளர் பதவியை எதிர்பார்த்துள்ளார். அதனால் தான், தினேஷ் குணவர்தனவின் பெயரை இந்த விவகாரத்துடன் சேர்த்து அறிக்கையிட்டுள்ளார்' என்றார்.
நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, எழுந்த விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, 'முன்னாள் சபாநாயகர்கள் இவ்வாறு இடமளித்ததே இல்லை. நீங்கள் மட்டும் தான் இடமளித்துக்கொண்டிருக்கின்றீர்கள். இது நாடாளுமன்றச் சம்பிரதாயத்தை பிழையாக வழிநடத்தும் செயற்பாடாகும்' எனக் கூறியமர்ந்தார். அதன் பின்னரே, இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago