2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

உயர்தர மாணவர், ஆசிரியர்களுக்கு மே மாதம் முதல் ’டெப்’ விநியோகம்

Editorial   / 2019 ஜனவரி 28 , பி.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசிரியர்களுக்கும் உயர்தர மாணவர்களுக்கும், இவ்வருடம் மே மாதம் முதல், டெப் கணினிகள் வழங்கப்படும் நிகழ்வு, எதிர்வரும் மே மாதம் முதல் அமுலுக்கு வருமென, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

குளியாபிட்டிய - கனதுல்ல தர்மராஜக் கல்லூரியில், அருகாமை பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடிக் கட்டடத்தை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், தொழிற்பயிற்சிக் கல்வி பயின்றோருக்கு, நல்ல எதிர்காலம் உள்ளது. வெளிநாடுகளில் தொழில்பயிற்சி கல்வி பயின்றோருக்கு அதிக சம்பளமும் கிடைக்கின்றதென்றும் ஆகவே, தொழிற்பயிற்சிக் கல்வியை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறினார்.

“உயர்தர மாணவ, மாணவிகளுக்கும் ஆசிரியர்களுக்குமான டெப் கணினிகளை, இவ்வருடம் வழங்குவோம். ஆசிரியர்கள் இல்லாதபோது, இணைத்தளங்கள் ஊடாகக் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். டெப் கணினியைப் பயன்படுத்தி, பரீட்சைகளுக்கு வெற்றிகரமாக முகங்கொடுப்பதற்குத் தேவையான பாடநெறிகள் தொடர்பாக, பிரத்தியேக வகுப்புகளை பாடசாலைகளில்  நடத்துவதற்கு நடவடிக்கை முன்னெடுக்குமாறு, பரீட்சை ஆணையாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன்” என்றும், அமைச்சர் கூறினார்.

உயர்தர மாணவர்களுக்கு, ஆரம்பம் முதல் பாடப் புத்தகங்கள் வழங்கப்படுவதில்லை. எனினும், உயர்தர மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும், டெப் கணினி வழங்கியதன் பின்னர், உயர்தரப் பாடத்துறை சார்ந்த பாடப் புத்தகங்களைத் தயாரித்து, டெப் கணியில் உள்ளடக்குமாறு, பரீட்சை ஆணையாளரிடம் கோரியுள்ளதாக, அமைச்சர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .