2025 ஜூலை 05, சனிக்கிழமை

‘உயர்நீதிமன்ற தீர்ப்புக்காக உத்தரவிடமுடியாது பிரார்த்தனை செய்யலாம்’

ஆர்.மகேஸ்வரி   / 2018 டிசெம்பர் 10 , பி.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நாடாளுமன்றத்தைக் கலைத்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யக்கோரி, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பான விசாரணையினை துரிதமாக வழங்குமாறு நாம் கடவுளிடம் உத்தரவிட முடியாது. பிரார்த்தனை மட்டுமே செய்யலாம் என ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டப் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அராஜக நிலையிருந்து நாட்டை மீட்டெடுத்து சாதாரண நிலைக்குக் கொண்டு வர உயர்நீதிமன்றம் விரைவாக தீர்ப்பை வழங்கவேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

இது மிகவும் அத்தியாவசிய தீர்ப்பாகும் நாட்டை அராஜக நிலையிலிருந்து மீட்டெடுத்து முன்னோக்கி கொண்டு செல்ல இந்த தீர்ப்பை விரைவில் எதிர்பார்த்துள்ளா​ர்.

தீர்ப்பு எதுவாயினும் பரவாயில்லை.அதை நாம் ஏற்றுக்கொள்ள தயாராகவுள்ளோம் ஆனால் தீர்ப்பு விரைவாக வர வேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .