2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

உயர்நீதிமன்றை நாட வீரசேகர தீர்மானம்

Freelancer   / 2023 மே 07 , பி.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா - வெடுக்குநாறிமலையில் சேதங்களை விளைவித்தமைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாடவுள்ளதாக முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தலைமையிலான குழுவினர் சனிக்கிழமை (06) விஜயம் செய்துள்ளனர்.

மலையின் அனைத்துப் பகுதிகளையும் பார்வையிட்ட அவர் மலையில் சேதங்களை ஏற்படுத்தியமை தொடர்பாக உயர்நீதிமன்றத்தை நாடவுள்ளதாகத் தெரிவித்ததாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
 
இதேவேளை, ஆலயத்தில் இந்து சமயப்பேரவையின் ஏற்பாட்டில் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றமையால் ஆலய நிர்வாகத்தினரும் அங்கு கூடியிருந்தனர்.

இதன்போது பிரதான காட்டுப் பாதையூடாக ஆலயத்துக்கு வருகை தருவோர் உழவு இயந்திரத்தைப் பயன்படுத்தி உள்வர வேண்டாம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மழை காரணமாக ஆலய வளாகத்தில் போடப்பட்ட தற்காலிக கொட்டகையையும் உடன் அகற்றுமாறும் நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .