2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

உயிர்த்த ஞாயிறில் ‘சாத்தானின் தாய்’ குண்டுகளே வெடித்தன

Editorial   / 2019 மே 23 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ் அமைப்பின் ‘சாத்தானின் தாய்’ வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டுகள் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நிபுணர்கள் உதவியுடன் இலங்கையிலேயே தயாரிக்கப்பட்டது எனத் தெரியவந்துள்ளது.

இதனால் இந்தக் குண்டு வெடிப்பில் வெளிநாட்டு தொடர்பு இருப்பதை அரசாங்கம் உறுதி செய்துள்ளது.   

பாரிஸில் நடந்த 2015 தற்கொலை தாக்குதல், 2017இல் இங்கிலாந்தில் மன்செஸ்டர் அரினா தாக்குதல், இந்தோனேசியாவில் ஒரு வருடத்துக்கு முன்பு தேவாலயங்களில் தாக்குதல்களில் இந்த வகையான வெடிகுண்டுகளே பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .