Freelancer / 2022 ஒக்டோபர் 07 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆனமடுவ திவுல்வெவ பிரதேசத்தில் வீடொன்றிலிருந்து காணாமல் போன 4 வயது குழந்தை உர பையில் சுற்றி முட்புதரில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று மதியம், வீட்டில் இருந்து தனியாக வெளியே சென்ற குழந்தை கை, கால்கள் கட்டப்பட்டு உரப் பையில் சுற்றப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டு ஆனமடுவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குழந்தையின் வீட்டில் இருந்து சுமார் 150 மீற்றர் தொலைவில் உள்ள முட்புதரில் குழந்தை சுற்றப்பட்டிருந்த உரப்பை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் அதே பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குழந்தையை கடத்தியமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆனமடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (R)
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago