A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 28 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐதராபாத்:
தெலுங்கானாவில், சேவல் சண்டைக்கு தயார் படுத்தப்பட்ட சேவல் தாக்கியதில், அதன் உரிமையாளர் உயிரிழந்தார்.
லோத்தன்னுார் கிராமத்தில், 16 பேர் அடங்கிய குழுவினர், சேவல் சண்டை போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.சில தினங்களுக்கு முன், அந்த சேவல் சண்டை நடந்தது. அதில் பங்கேற்ற சேவல் ஒன்றின் காலில், கூர்மையான கத்திகள் கட்டப்பட்டிருந்தன. போட்டிக்கு தயார்படுத்தப்பட்டபோது, அந்த சேவல் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றது.
அதை, உரிமையாளர் பிடிக்கவே, அந்த சேவல் தன் கால்களால், அவரை தாக்கியது. அப்போது, காலில் கட்டப்பட்டிருந்த கத்தி, அவரின் இடுப்பை பதம் பார்த்தது.படுகாயமடைந்த அவர், உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
எனினும், அதிக இரத்தம் வெளியேறியதால், அவர் உயிரிழந்தார். உயிரிழந்த நபர், அந்த சேவல் சண்டையை ஏற்பாடு செய்தவர்களில் ஒருவர் என்பது தெரியவந்து உள்ளது.
சட்டவிரோதமாக இந்த போட்டியை ஏற்பாடு செய்த மீதமுள்ள, 15 பேரை தேடும் பணிகளில், பொலிஸார் ஈடுபட்டு உள்ளனர்.
6 hours ago
09 May 2026
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
09 May 2026
09 May 2026