Freelancer / 2022 செப்டெம்பர் 15 , மு.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான்குளம் பகுதியில் நேற்று(14) சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
கிரான்குளம் பகுதியிலுள்ள தனியார் காணியொன்றிலிருந்து உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கிரான்குளம் பகுதியை சேர்ந்த 7 பிள்ளைகளின் தந்தையான 55 வயதுடைய ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த திங்கட்கிழமை வேலைக்கு சென்ற நபர் வீட்டிற்கு திரும்பாத நிலையில், நேற்று காட்டுப் பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .