2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

உலர் கடற்குதிரைகளுடன் சந்தேகநபர்கள் கைது

Editorial   / 2019 ஜனவரி 15 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஹம்மது முஸப்பிர், ரஸீம் ரஸ்மின்

இந்தியாவிலிருந்து படகு மூலம் கொண்டுவரப்பட்ட, பிடிப்பதற்கு தடை செய்யப்பட்ட மீனினங்கள் மற்றும் உலர் கடற்குதிரைகள் என்பவற்றுடன் சந்தேகநபர்கள் இருவர் நேற்று (14) பொலிஸாரால் கற்பிட்டி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது, உலர் கடற்குதிரைகள் 130 கிலோகிராமும், பிடிப்பதற்கு தடை செய்யப்பட்ட மீனினங்கள் 500 கிலோகிராமும் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபர்கள் 31 மற்றும் 46 வயதுடையவர்களென்றும் கற்பிட்டி – பள்ளிவாசல்துறை பிரதேசத்தைச் சேர்ந்தவர்களென்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .